திருச்சியில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்

திருச்சி மாநகரில் பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, என்.எஸ்.பி. ரோடு, சின்ன கடைவீதி ஆகிய பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லை. இதனால் இப்பகு திகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் தங்களது இரண்டு, மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வதால் தற்போதும் இந்தப் பகுதி களில் போக்குவரத்துக்கு பெரிய இடையூறு இருந்து வருகிறது.இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2 வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலரண் சாலையில் தமிழ் சங்கக் கட்டிடத்துக்கு எதிரே ஏற்கனவே சிட்டி கிளப் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இடத்தில் ரூ.19.70 கோடியில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி 2019, ஜூலை மாதம் தொடங்கியது. இதில் தரை தளத்தில் 23 கடைகள், உணவகம், காபி ஷாப் ஆகியவை அமைய உள்ளன.
மேலும் தரை மற்றும் முதல் தளங்களில் 7,780 சதுர அடி பரப்பளவில் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமையவுள்ளன. 2,3 வது தளங்களில் தலா 23,120 சதுர அடி பரப்பளவில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளன. இதன்படி இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். பன்னாட்டு நிறுவன வளாகம் போல இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே போல சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் சிந்தாமணி போலீஸ் குடியிருப்பு அருகே காளி யம்மன் கோயில் தெருவில் காய்கறி சந்தையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்ப ட்டுள்ளது.இதில் 17 நிரந்தர கடைகளும், 32 தரைக்கடை களும் அமைய உள்ளன. 1,2-வது தளங்களில் தலா 7,260 சதுர அடி பரப்பளவில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளன. இவற்றில் ஒரே நேரத்தில் 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். இவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu