முல்லைப்பெரியாறு பிரச்சினையில் ஸ்டாலின் நடிப்பு- அண்ணாமலை குற்றச்சாட்டு

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் ஸ்டாலின் நடிப்பு- அண்ணாமலை குற்றச்சாட்டு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.

முல்லைப்பெரியாறு அணை திறப்பு பிரச்சினையில் ஸ்டாலின் நடிக்கிறார் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிகழ்வை எல்.இ.டி. திரைக்கு முன்பாக அமர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசிய அண்ணாமலை கூறியதாவது:-ஆதி சங்கரர் சென்ற எல்லாஸ்தலங்களிலும் இன்று சிறப்பு பூசைநடைபெற்றது. 8- ஆம் தேதி தேனியில் முல்லை பெரியார் விவாகரம் தொடர்பாக பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.முல்லை பெரியாறு அணை நம்முடையகட்டுப்பாட்டில் உள்ள அணை. ஆனால் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல்தண்ணீர் திறந்து உள்ளனர். முல்லை பெரியாறு நீர் மட்டம் 142 அடிசென்றால் தான் நமக்கு 10 டி.எம்.சி.கிடைக்கும். ஆனால் 136 அடி இருந்தபோதே ஷட்டரை திறந்துள்ளனர்.வாய்மொழியாக அனுமதியை கொடுத்துவிட்டு நடிக்கின்றனர்.

100 நாள் வேலைத்திட்டத்தில் மாபெரும்அரசியல் நடக்கிறது. மத்திய அரசு இரண்டு தவணையாக நிதியை கொடுத்துஉள்ளனர்.தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசை அணுகிய போது சரியான நேரத்தில் பணத்தை கொடுத்து உள்ளனர். 100 நாள்வேலை திட்டத்தில் 246 கோடியே 13 லட்சம்ரூபாய் ஊழல் நடந்துள்ளது.ஒரு கோடி 85 லட்சம் ரூபாய் மட்டுமேதமிழக அரசு மீட்டுள்ளது. ஒருமாவட்டத்தில் கூட குறை தீர்க்கும் அதிகாரி இல்லை. தமிழ்நாடு அரசு அதை நியமிக்கவே இல்லை. குறை தீர்க்கும்அதிகாரியை நியமிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு இதில் வேகமாகதலையிட்டு ஊழல் பணத்தை மீட்கவேண்டும்.

தேனி மாவட்டத்திற்கும், முல்லைபெரியாருக்கும் மட்டுமே அதிகம்இணக்கம் உண்டு. அணை திறக்கவேண்டும் என்றால் அங்கு நம் தேனிஆட்சியர் இருக்க வேண்டும். ஆனால்அவர் இல்லை. 2024 இல் துணை பிரதமமந்திரியாக நிற்பதற்காக கேரளா உதவிசெய்யும் என முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடினார்.பொதுப்பணிதுறை அமைச்சர் தேனிமுல்லைப் பெரியாறு அணைக்கு சென்றுள்ளார். கண் கெட்ட பின்னர் சூரியநமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்.ஸ்டாலினுக்கும், கம்யூனிஸ்டுக்கும் தகாத உறவு உள்ளது. அது என்ன என்று விளக்கவேண்டும்.

முன்னாள் அமைச்சர் ப,சிதம்பரம் நிறைய படித்தவர். நிறையப்படித்து இருந்தாலே பகுத்தறிவு என்பதுகுறைவாகதான் இருக்கும். சிதம்பரம் உண்மையாக தமிழ்நாட்டின் மீது அக்கறைகொண்டவராக இருந்தால் தமிழ்நாடுஅரசை கேட்க வேண்டும். தமிழ்நாட்டில்ஏன் பெட்ரோல் விலையைகுறைக்கவில்லை என மு.க. ஸ்டாலினிடம்கேட்க வேண்டும்.இந்தியாவிற்கு காங்கிரஸ் தேவையேஇல்லை என்பதை ப.சிதம்பரம்சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!