மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளருக்கு எம்.எஸ். உதயமூர்த்தி விருது

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகத்திற்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது வழங்கப்பட்டு உள்ளது.

மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் இராசலிங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில், நடந்த பொதுக்குழுவில்மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் திருச்சி கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும் இந்த ஆண்டு (2020- 2021) சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி விருதையும் திருச்சி கே.சி. நீலமேகத்திற்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!