திருச்சிக்கு வந்த ம.பி, முதல்வர் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம்

திருச்சிக்கு வந்த ம.பி, முதல்வர் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம்
X

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பா.ஜ.க. வினர் வரவேற்பு அளித்தனர்.

திருச்சிக்கு வந்த ம.பி, முதல்வர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மதியம் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தடைந்தார். பின்னர் சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். முன்னதாக ரெங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ம.பி, முதல்வருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

முதல்வருடன் அவரது மனைவி சாதனா சிங் சவுகானும் வந்திருந்தார். இருவரும் ராமானுஜர் சன்னதி, சக்கரத்தாழ்வார், நம்பெருமாள் மூலஸ்தானம் மற்றும் தாயார் சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு கோவிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி விமான நிலையம் சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர்கள் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!