திருச்சியில் ஆட்டோ மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

திருச்சியில் ஆட்டோ மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு
X
திருச்சியில் ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன், அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அப்சலான் (வயது 58). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே வழியில் வந்த ஆட்டோ ஒன்று அப்சலான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்சலானை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்சலானின் மனைவி விமலா மேரி கொடுத்த புகாரின் பேரில், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆட்டோ டிரைவர் சவுகத் அலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!