திருச்சி பெரிய மிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியீடு

திருச்சி பெரிய மிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியீடு
X
மோட்டார் சைக்கிள் திருட்டு பற்றிய சி.சி.டி.வி. பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி பெரியமிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பெரியமிளகுப் பாறையில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக இருசக்கர வாகனத்தை 20 வயதுக்கும் குறைவான இளைஞர்கள், சிறுவர்கள் திருடுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தடுப்பது என்று போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு கடுமையான தண்டனை தான் தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology