திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது

திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி பணம்  மோசடி செய்தவர் கைது
X
திருச்சியில் அதிக வட்டி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி கே.கே.நகர் எஸ்.பி.ஐ.காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவரும்,இவரது மனைவி அருள்கண்ணாவும் இணைந்துரெட்டிமாங்குடி பகுதியில் பயோடெக் லிமிடெட் என்ற கம்பெனி நடத்தி வந்தனர். இந்நிலையில்தென்னூர் ஜெனரல் பஜார் பகுதியைசேர்ந்த அகமது பாஷா (வயது 40)என்பவரிடம் கம்பெனிமுன்னேற்றத்திற்காக ரூ.5 லட்சம் தந்தால் மாதா, மாதம் ரூ. 37,500வட்டியாக தருவதாகஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 2019-ஆம்ஆண்டு பணம் பெற்றுள்ளனர்.அதற்காக வங்கி காசோலைகள் 12கொடுக்கப்பட்டது. ஆனால் ஒருமாதம் மட்டுமே வட்டி எடுக்கமுடிந்ததாம். மற்ற காசோலைகள் பவுன்ஸ்ஆகவே, அகமது பாஷா இதுகுறித்து செந்திலிடம் கேட்டுள்ளார். ஆனால்அவர் பணம் தர மறுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம்அகமது பாஷா புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோலீசார் செந்திலிடம் இருந்து ரூ. 1லட்சம் பெற்றுகொடுத்துள்ளனர். அதன்பிறகுசெந்தில் பாக்கி தொகையைகொடுக்காமல் அகமது பாட்ஷாவை மிரட்டியுள்ளார். இதன் காரணமாகசெந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்