திருச்சியில் ஓட்டுக்கு பணம்- மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை மறு நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் வந்தாலும் யாரும் புகார் செய்வது இல்லை. இதனால் பணப்பட்டுவாடா பல இடங்களிலும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் திருச்சி பீமநகரை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஹரி பாஸ்கர் மாநில தேர்தல் ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் நான் நான் சட்டம் படித்து வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். இந்திய ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் எந்தக் கட்சியிலும் பங்கீடு இல்லாத நான் பொதுமக்களின் நலனைக் கருதி அளிக்கும் புகார் மனு என்னவென்றால்
உள்ளாட்சித் தேர்தல் 2022 ல், எமது பகுதியான திருச்சிராப்பள்ளி 53 வது வார்டில் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் செல்வந்தர்கள் பலர். எமது பகுதியில் கடுமையான போட்டி நிலவுவதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஓட்டு சேகரித்து வருகின்றனர். இதில் சட்டப்படி ஓட்டு கேட்பவர்கள் ஒருவிதம் , இதில் செல்வந்தர்கள் தனது பண பலத்தை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதை அதிகாரப்பூர்வமாக யாரும் புகார் கொடுப்பதற்கு வராத காரணத்தினால் எமக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஓட்டுக்கு ரூபாய் 500 வீதம் 300 நபருக்கு வேட்பாளர் சார்பில் பணம் கொடுத்து வருவதாக தகவல். இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இதற்கு தனிப் படை அமைத்து எமது வார்டில் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதற்கு வழிவகை செய்யுமாறும். இதனை அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஜனநாயக நாட்டில் எந்தவித குளறுபடியும் இல்லாமல் அவரவர் தனது சொந்த முடிவில் வேட்பாளரை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் சுதந்திரமாக யாருடைய கட்டாயமும், வற்புறுத்தலும், இல்லாமல் வாக்களிக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu