மத்திய தொழிற்சங்கத்தினர் மோடி அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கத்தினர் மோடி அரசை கண்டித்து  திருச்சியில் ஆர்ப்பாட்டம்
X

மத்தியில் உள்ள மோடி அரசை கண்டித்து திருச்சியில் இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோடி அரசை கண்டித்து திருச்சியில் மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேசத்தில் போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த மத்திய அமைச்சர் மகன் உள்ளிட்ட கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் ஆறு லட்சம் கோடிக்கு ஏலம் விடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக்கோரியும் மத்திய தொழிற்சங்க அமைப்புகள் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இதில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் நடராஜா, துணைச் செயலாளர் ராமராஜ், பாரத மிகுமின் தொழிற்சங்க தலைவர்கள் லோகநாதன், சங்கர் கணேஷ், கட்டுமானம் செல்வக்குமார், போக்குவரத்து அன்பழகன் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர்கள் ராஜேந்திரன், கருணாநிதி, ஜெயபால் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story