/* */

திருச்சி மன்னார்புரத்தில் நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்

திருச்சி மன்னார்புரத்தில் நவீனமயமாக்கப்பட்ட சிக்னலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் இன்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சி மன்னார்புரத்தில் நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்
X

திருச்சி மன்னார்புரத்தில் நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகரில் இயங்கி வரும் போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் பொறுப்பேற்றதில்இருந்து திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

திருச்சி மாநகர பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து இடையூறுகளையும், வாகன விபத்துக்களையும் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. இவற்றில், மன்னார்புரம் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னலில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சிக்னலை தாங்கியுள்ள கம்பம் முழுவதுமாக சிக்னல் விளக்கு எரியக்கூடிய வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து தானியங்கி சிக்னலை பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் பயன்பாட்டிற்காக, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது

தலைமை தபால் நிலைய சந்திப்பு மற்றும் பால்பண்ணை சாலை சந்திப்புகளில் இயங்கி வரும் போக்குவரத்து தானியங்கி சிக்னல்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதியதாக ஒளிரும் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டு சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்துக்களை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறுகளை சீர்செய்யவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திவேல் (வடக்கு) மற்றும் முத்தரசு (தெற்கு), போக்குவரத்து வடக்கு மற்றும் தெற்கு ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி, 2021-ம் ஆண்டு இதுவரை தலைகவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 3 லட்சத்து 96 ஆயிரத்து 695 நபர்கள் மீதும், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 58 ஆயிரத்து 015 நபர்கள் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்ற 4 ஆயிரத்து 172 நபர்கள் மீதும், மற்றும் செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் வாகனம் ஓட்டி சென்ற 13 ஆயிரத்து 313 நபர்கள் மீது மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துக்களையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டைவிட நடப்பு 2021-ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவதை உறுதி செய்யும் வகையில் இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

Updated On: 1 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்