திருச்சியில் மாயமான நர்ஸ் மீட்பு- பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சியில் மாயமான நர்ஸ் மீட்பு- பெற்றோரிடம் ஒப்படைப்பு
X
திருச்சியில் மாயமான நர்சுவை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி புத்தூர் எட்டுப்பேட்டை பங்களா பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 27). இவர் நர்சிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு வீட்டில் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் திருமணத்தில் சௌந்தர்யாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வந்தனர். இந்திலையில் சௌந்தர்யாவை போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!