திருச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

திருச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், செந்தில் பாலாஜி  பரபரப்பு பேட்டி
X
திருச்சி விமானநிலையத்தில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில் பாலாஜி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பேட்டி அளித்தனர்.

திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடையே கூட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும் அதனை மீறி பொதுமக்கள் கூட்டம் கூடுவது வருத்தத்தை அளிக்கிறது.

அதனை தவிர்க்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சி அமைப்புகளும், காவல்துறையினருடன் இணைந்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் இழப்பீடுவழங்குவது குறித்து மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசும் அது குறித்து முடிவு செய்யும்.

தடுப்பூசி போடப்படும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்து அப்பணியில் ஈடுபடுபவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இன்று ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது .இதில் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும்,11 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பு ஊசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை அரசு சார்பில் மட்டும் 5 கோடியே 38 லட்சத்து 628 பேருக்கு அரசு சார்பில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

கோவாக்சீன் 28 நாட்களுக்குப் பிறகும், கோவீஷில்டு 84 நாட்களுக்கு பிறகும் செலுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2 வது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா மூன்றாவது அலை வராது என புறக்கணித்து விட முடியாது என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி 43 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் நிலக்கரி தேவை 56 ஆயிரம் டன்னாக உள்ள நிலையில் மத்திய அரசு 60 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குகிறது .

நான்கு முதல் ஐந்து தினங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது.தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்.

4,000 மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிப்பு பூங்கா அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,

இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் 1 லட்சம் மின் கம்பங்கள், மற்றும் மின் தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது.

மின்சார துறை சார்பில் வட்டியாக ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு வருவதாகவும் அதனை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil