திருச்சியில் நடந்த திராவிட மாடல் பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சியில் நடந்த திராவிட மாடல் பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு
X

திருச்சியில் நடந்த திராவிட மாடல் பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யமாெழி பங்கேற்றனர்.

திருச்சியில் நடந்த திராவிட மாடல் பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி மகளிரணி, மாணவரணி தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான திராவிட மாடல் பாசறை கூட்டம் தேசிய பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

தமிழர் தேசிய விடுதலை கழகத்தின்பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் சபாபதிமோகன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கே.என்.சேகரன், கோவிந்தராஜன், வண்ணைஅரங்கநாதன், மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai and future cities