திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய அமைச்சர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில் “மக்களுடன் முதல்வர்;” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திலும்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொத்தமேட்டுப்பட்டியிலும் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொது மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களை சென்று சேரும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1- ஸ்ரீரங்கம் தேவி ஹால், எஸ்.கண்ணனூர் பேரூராட்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம் மற்றும் இலால்குடி ஊராட்சி ஒன்றியம் தாளக்குடி,ஏ.பி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை பார;வையிட்டார்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொத்தமேட்டுப்பட்டி மாதா மக்கள் மன்றத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, முகாமை பார்வையிட்டார்.
இம்முகாம்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் 19 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 22 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 13 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 26 இடங்களிலும் என மொத்தம் 80 இடங்களில் 18.12.2023 முதல் 05.01.2024 வரை நடைபெற உள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்திடவும் ”மக்களுடன் முதல்வர;” என்ற புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு துறை, மகளிர் மேம்பாட்டு கழகம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை ஆகிய 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெற்று தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்ன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன்,அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், நகர பொறியாளர் திரு.சிவபாதம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu