கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் அமைச்சர் அஞ்சலி

மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை செய்தார். அருகில் மேஜர் சரவணன் குடும்பத்தினர்.
மேஜர் சரவணன் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினார்
கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. பாகிஸ்தான் ஆதரவோடு பாகிஸ்தான் எல்லையான கார்கில் பகுதியில் முகாமிட்டு இருந்த தீவிரவாதிகளை விரட்டி அடிக்க இந்திய ராணுவத்திற்கு பல நாட்கள் ஆனது. இந்திய ராணுவ வீரர்களின் வீராவேச தாக்குதலில் நிலை குலைந்து போனார்கள் தீவிரவாதிகள். இறுதியாக தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டு அந்த பகுதியில் நமது நாட்டின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
அப்போது நடைபெற்ற போரில்எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணைகளால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தார் திருச்சியைச் சார்ந்த மேஜர் சரவணன். அவரது வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர சக்கரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.
மேஜர் சரவணனின் வீரத்தை போற்றும் வகையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. அவரது 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய மேஜர் சரவணன் அறக்கட்டளை சார்பாக இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu