ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார்

ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார்
X

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் நேரு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் 6 சிறப்பு சக்கர நாற்காலிகளை அமைச்சர் நேரு வழங்கினார்.

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சக்கர நாற்காலி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும்.இதே போல் 13 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

மேலும் மகளிருக்கான இலவச தையல் எந்திரம், திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்