திருச்சியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்த நாள் விழா இன்று காங்கிரசார் மட்டும் இன்றி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் செவவந்தி லிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜா மலைவிஜய், மோகன்தாஸ், ராம்குமார், இளங்கோ, இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர். சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu