திருச்சியில் இம்மானுவேல் சேகரன் உருவ படத்திற்கு அமைச்சர் நேரு அஞ்சலி
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகரில் உள்ள தி.மு.க .முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியான்டி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வழக்கறிஞர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் செவந்தி லிங்கம், பகுதி செயலாளர்கள் ராம்குமார், இளங்கோ, மோகன்தாஸ், போட்டோ கமால், நாகராஜ், கனகராஜ் , கோட்ட தலைவர் துர்கா தேவி மற்றும் டோல்கேட் சுப்பிரமணி, துரைராஜ் கதிர்வேல், சிங்காரம் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu