பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திருச்சி பகுதியை ஆண்ட மன்னர்களில் ஒருவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். வாள்வீச்சில் வல்லவரான பெரும்பிடுகுவின் வீரத்தை போற்றும் வகையில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை கடந்த 1991 - 95 கால கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் மே 23ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 1349வது சதய விழாவையொட்டி மன்னர் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் ,பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 வ து சதய விழாவை முன்னிட்டு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அவரது திருவருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்த நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், மாணிக்கம், பழனியாண்டி மாநகராட்சி மேயர் அன்பழகன், அருண் நேரு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கருப்பையா சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம் காஜாமலை விஜி, முத்துக்குமார் கருணாநிதி, மோகன்தாஸ், உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், முத்தரையர் இன மக்களின் சாதி சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மன்னர் பெரும்பிடுகு சதய விழாவை முன்னிட்டு கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu