அரசு பள்ளியில் படித்த தேசிய சட்டப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சந்திப்பு
அரசு பள்ளியில் படித்து கிளாட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுதேசிய சட்டப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேசினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், அரசு பள்ளிகளில் பயின்று நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிலும் மாணவி ஆகியோரை இன்று (27.10.2023) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில்அரசு பள்ளிகளில் பயின்று கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வரும் 14சட்டக்கல்லூரிமாணவர்கள்மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவி உள்ளிட்டோரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (27.10.2023) தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரில் சந்தித்து கலந்துரையாடி,நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மடிக்கணினிகளை வழங்கி, உரையாற்றினார்.
அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தமிழ்நாடு அரசுபள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாதிரி பள்ளிகளில் கல்வி பயின்று, பயிற்சி பெற்று அதன் மூலம் கிளாட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று திருச்சிராப்பள்ளியில்உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள 14 மாணவர்கள் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவி உள்ளிட்ட உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு பள்ளி மாணவர்கள் இன்று பல்வேறு சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய சட்டப் பள்ளி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வந்துள்ளோம்.அரசாங்கம் என்பது ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரலாம். ஆனால் முதலமைச்சராக, அமைச்சராக ஒரு பொறுப்பு வரும்பொழுது அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது தான் முக்கியம்.
நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் முதன்முதலாக இட ஒதுக்கீடு தொடர்பாக தான் திருத்தம் செய்யப்பட்டது.எல்லோருக்கும் எல்லாம் என்பதை நீதி கட்சி காலத்தில் இருந்தே செயல்படுத்தி வருகிறோம். இன்றைய தமிழ்நாடு முதலமைச்சரும் அதை திராவிட மாடல் என சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
யார் எதை சொன்னாலும் அதை முழமையாக நம்பாமல் நம்முடைய இயல்பான அறிவை பயன்படுத்தி அதுகுறித்து ஆராய வேண்டும் எனதந்தை பெரியார் கூறியுள்ளார். அதன்படி நீங்கள் கல்வி கற்க வேண்டும், செயல்பட வேண்டும்.ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது மிகப் பெரிய சவால் இல்லை. அது ஒரு தொடர்புக்கான மொழிதான். இருந்தாலும் உலக அளவில் சிறந்த முறையில் செயல்பட ஆங்கிலம் கட்டாயம் தேவை. அதனால் அதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாதிரி பள்ளிகள் மூலமாக போட்டி தேர்வுகள் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அதை அவர்கள் எதிர்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திதர வேண்டும் என சிந்தித்து மாதிரி பள்ளிகளை உருவாக்கினோம். அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளோம்.
நீங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட்டோம் என நின்றுவிடாமல் உங்கள் பகுதிகளை சேர்ந்த போட்டி தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தேர்வெழுத வைத்து தேர்ச்சி பெற செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரு தூதுவராக செயல்பட வேண்டும்.தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் என சில மாவட்டங்களை கூறுவார்கள். இன்று அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று வருகிறார்கள். கல்வியில் பின் தங்கிய மாவட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலங்களில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி உள்ளோம்.இன்று ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பது, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியாக அனைத்து பள்ளிகளும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டை முதலில் தொடங்கியுள்ளோம்.கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் அரசு பள்ளிகளிலிருந்து தேசிய சட்டப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என கூறுகிறார;கள். இது உண்மையில் எங்களுக்கு பெருமையாக உள்ளது.அரசு பள்ளிகளில் இருந்து இங்கு பயில வந்திருக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் சில பிரச்சனைகள் இருக்கும் அதை பேராசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் கல்வி பயின்றுஉங்கள் வீட்டிற்கும், நம் நாட்டிற்கும் பெருமை சோ;க்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி,தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாகராஜ், பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி மண்டலத் தலைவர் மதிவாணன், பேராசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu