திருச்சியில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு

திருச்சியில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு
X

திருச்சி ஆர்எம்எஸ் காலனியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனியில் மாநகராட்சி பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி கூடத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன் , நகர பொறியாளர் பி.சிவபாதம், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன். மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்.யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெ.யநிர்மலா, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story