அமைச்சர் கே.என்.நேருவிடம் கி. வீரமணி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

அமைச்சர் கே.என்.நேருவிடம் கி. வீரமணி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?
X

அமைச்சர் நேருவிற்கு சால்வை அணிவித்து கோரிக்கை வைத்தார் கி. வீரமணி.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை கி. வீரமணி சந்தித்து சாலை பெயர் மாற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று திருச்சி வந்தார். தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்த வீரமணி
திருச்சி கோர்ட் பாலம் முதல் புத்தூர் நான்குரோடு வரை உள்ள சாலைக்கு பெரியார் சாலை என்ற பெயரை சுருக்கி அரசு பெயர் பலகையில் சுருக்கமாக இ.வி.ஆர். சாலை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனை பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு ஆவன செய்வதாக அமைச்சர் நேரு உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story