திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
X

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை சுற்றி கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அதிகமாக இருப்பதால் அங்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 650-க்கும் மேற்பட்டவை நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன.

எனவே திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்ட நிதியில் இருந்து ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நகர பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இது வருகிற 30ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

இதனை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள கடைகள், ஓட்டல், அண்டர் கிரவுண்டில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். சத்திரம் பஸ் நிலையம் மொத்தம் 7,029 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ளது. 15 பஸ்கள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகியவை இடம் பெற்றுள்ளன.

முதல் தளத்தில் உணவகம் பொருட்கள் பாதுகாப்பு அறை பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம் பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகியவையும் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் 350 நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்திரம் புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டர் டிரைவர்கள் குளிக்க வசதிகள் செய்து தரப்படும். மேலும் சாப்பாடு வசதி செய்து தரப்படும். எம்.ஆர்.பாளையம் வன உயிரியல் பூங்கா அடுத்த வருடம் கண்டிப்பாக கொண்டு வருவோம். குடிசை மாற்று வாரியத்தில் வடமாநில சிறுவர்கள் வேலை செய்தால் கலெக்டர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந் தேதி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் புதிய பஸ் நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக முதற்கட்டமாக ரூ. 400 கோடி அரசாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த பஸ் நிலையத்தில் கோயம்பேடு மார்க்கெட் மாதிரி சில்லறை மார்க்கெட் கொண்டுவரப்படும்.

இந்த பஸ் நிலையத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. ஏற்கனவே அண்ணாசிலையில் இருந்து குடமுருட்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையை அண்ணாசிலையில் இருந்து ஜங்ஷன் வரை கொண்டு செல்ல முடியுமா? என துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

கள்ளிக்குடி மார்க்கடை பொருத்த மட்டில் வியாபாரம் நடக்க வில்லை. ஆகையினால் வியாபாரிகள் அங்கு செல்ல விரும்பவில்லை. அந்த கட்டிடம் தவறாக கட்டி விட்டார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?. ரூ. 80 கோடி செலவு செய்துள்ளதாக சொல்கிறீர்கள். சின்னச்சின்ன அறைகளாக கட்டியிருக்கிறார்கள். மாடிக்கு சரக்கு கொண்டு செல்வது சிரமமாக இருக்கும். அந்த கள்ளிக்குடி மார்க்கெட்டை என்ன செய்யலாம் என்று நல்ல யோசனை இருந்தால் சொல்லுங்கள். வல்லுநர் குழு மூலம் அதனை எதற்கு பயன்படுத்துவது? என்று பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!