அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி பள்ளியில் திடீர் ஆய்வு
![அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி பள்ளியில் திடீர் ஆய்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி பள்ளியில் திடீர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2022/03/25/1503507-an.webp)
திருச்சி மலைக்கோவில் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் மேம்பாட்டு வசதிகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களிடம் குறை கேட்டார்.
தற்போது 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அப்பள்ளியில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாமினையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும் மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி குறித்தும், அதன் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu