அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்ட உதவி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவெறும்பூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவி என ரூ. 9 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை56 பேருக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன்,திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ்,திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சமும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் 4,லட்சத்து 22, ஆயிரத்து 100 உட்பட மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 100ரூபாய் மதிப்பில் 56 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் பேரூராட்சி செயலாளர் தங்கவேல், பகுதி செயலாளர்கள் சிவகுமார், நீலமேகம்,இயன்முறை சிகிச்சையாளர் ரமேஷ், செயல் திறன் உதவியாளர் செல்வ பாண்டி, தேர்ச்சி பயிற்சியாளர் துறை பாண்டிஉட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மார்ச் 1ஆம் தேதி முதல் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தி முடிக்கப்படும். அது எந்த தேதிக்குள் வேண்டுமானாலும் அவர்கள் வசதிக்கு ஏற்ப முடித்துக் கொள்ளலாம்.திட்டமிட்டபடி மார்ச் 13ஆம் தேதி பள்ளி பொது தேர்வு நடைபெறும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என கமிஷனிடம் தெரிவித்து நிறுத்தப்பட்டுள்ளது அப்படி பணியிடம் மாற்றம் செய்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளும் தேர்வு பாதிக்கப்படும். பொது தேர்வு என்பது தேர்தலுக்கு நிகரானது .
இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பணிக்கு செல்கிறேன். எனக்கு 4 பூத் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளார்கள். அவர்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu