திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் 80 தொழில் முனைவோருக்கு வங்கி கடனுதவி
திருச்சியில் மகளிர் தொழில் முனைவோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (06.10.2023) திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கேற்றி வைத்து, 80 தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி விழாப்பேருரையாற்றினார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்க திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் அந்த குடும்பமும் சமுதாயமும் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:-
பெண்கள் வருங்காலத்தில் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்ற இலக்கை விதைத்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், முத்தழிழறிஞர் டாக்டர் கலைஞர் தான் தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை தொடங்கி வைத்தார். அதன் பிறகு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது பல லட்சக்கணக்கில் மகளிர் உதவிக்குழு எண்ணிக்கையை அதிகபடுத்தினார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான நிதிகளை வழங்கி வருகிறார்.அது உங்கள் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையாகும். அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் உங்களது தேவையை உணர்ந்து தான் என்பதை அறிந்து கொள்வதுடன் அதனை செயல்படுத்தும் அறிவு சார்ந்த விதமாக பெண்கள் இருக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்த விழா நிகழ்வில், 20 பஞ்சாயத்துக்களை சேர்ந்த 80 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் ரூ.40 இலட்சம் சமூக தொழில் முனைவோர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(மகளிர்திட்டம்) ரமேஷ் குமார் திருவெறும்பூர் ஒன்றியக்குழு தலைவர் சத்யாகோவிந்தராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu