திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு
X

திருச்சியில் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திட்டப்பணிகள் திருச்சி மாவட்டத்தில் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், அனைத்து அரசு துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள், சாலை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், நூலகங்களின் செயல்பாடுகள் குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிம வள நிதி, பெரியார் நினைவு சமத்துவபுரம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், சமையலறை கட்டிடம் கட்டுதல், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஊராட்சி செயலக கட்டிட பணிகள், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கப் பணிகள் குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு திட்ட செயலாக்கம், ஊராட்சி செயலக கட்டிடங்கள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், டெல்டா மாவட்டங்களின் குறுவை தொகுப்பு திட்டம், இயற்கை இடுபொருள் தயாரித்தல், குறுவை பருவத்தில் மாற்றுப் பயிர; சாகுபடியில் சிறப்பு தொகுப்பு திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தோட்டக்கலைத்துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித்தி;ட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, இன்னுயிர் காப்போம் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், சித்த மருத்துவம், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர; நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், திறன் மேம்பாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் பால்வளத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வனத்துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்துத்துறை, வணிக வரித்துறை, பதிவுத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ் வளர்ச்சித்துறை, கதர் மற்றும் கிராம தொழில்துறை, உயர் கல்வித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கான திட்டப்பணிகள் அனைத்தையும் தொய்வின்றி சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளுமாறு அரசுத்துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, இனிகோ இருதயராஜ், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகர காவல் துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார், செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business