எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை கொண்டாட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அழைப்பு

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை கொண்டாட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அழைப்பு
X
ப.குமார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை கொண்டாட திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி குமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழக நிறுவன தலைவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 105ம் ஆண்டு பிறந்த நாள் விழா ஜனவரி 17ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி புறநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலை உள்ள இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாவை சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சிலை இல்லாத இடங்களில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் படிவேண்டுகிறேன்.

அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மருத்துவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை,அம்மா பேரவை, தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி,கலைப்பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் திருநீலகண்டா் குரு பூஜை..!