எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் பிறந்த நாளான (17.1.2022 திங்கள் கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், அவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலை 9:30 மணி- சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை,காலை 9.45மணி- குழுமணி எம்.ஜி.ஆ.ர் சிலை,காலை 10.30மணி- பெட்டாவாய்த்தலை.காலை 10: 30மணி- முசிறி கைகாட்டி அண்ணாசிலை அருகில், காலை 11: 30மணி- துறையூர் எம்.ஜி.ஆர். சிலை,காலை 11.45மணி- கரட்டாம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை. ஆகிய இடங்களில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்கிறார்.

Tags

Next Story
Similar Posts
திருச்சி சுந்தர்ராஜ் நகரில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏடியுசி சார்பில் பதிவு தபால்
திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதியில் அக். 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து
ai solutions for small business