திருச்சி கோட்டை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்
திருச்சி மதுரை ரோடு கல்யாணசுந்தரபுறம், சின்னப்ப நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் லதா (வயது 56) இவரது கணவர் பாலு (வயது 61). இவர் கடந்த இரண்டரை வருடங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலு இன்று காலை கடலூரில் உள்ள அவரது தங்கை கல்பனாவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதனால் லதா, பாலுவை அழைத்துக் கொண்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியிலுள்ள கடலூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சின் இருக்கையில் பாலுவை உட்கார வைத்திருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்ட போது பாலு அங்கிருந்து மாயமானார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து லதா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலுவை தேடி வருகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu