திருச்சி மாவட்டத்தில் 10-ந்தேதி 600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் 10-ந்தேதி 600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்டத்தில் 10-ந்தேதி 5-வது மெகா தடுப்பூசி முகாம் 600 இடங்களில் நடைபெற இருப்பதாக கலெக்டர் சிவராசு கூறினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்து 100 என்ற நிலையில், இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்து 901 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதாவது திருச்சியில் 61 சதவீகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ள நிலையில், தற்போது வரும் 10-ஆம் தேதி ஞாயிறு அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில் 70 சதவீதத்தை நாம் எட்டிவிட்டோம் என்றால், 3-வது அலை வராது. தெருவோரம் வசிப்போர், முகவரியற்றோர் என்று 22 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai future project