திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம்

திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், மணல் கடத்தலை தடுத்தல், போக்குவரத்து நெருக்கடி சீரமைத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டர் சிவராசு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!