சுரைக்குடுவையில் தண்ணீர் நிரப்பி குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சுரைக் குடுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரைக்குடுவை குறித்து பேசியதாவது:-
நம் பாரம்பரியம் நமது பெருமை அவ்வகையில் இல்லத்திலேயே புழங்கு பொருட்களை வைத்து காட்சியகம் அமைத்துள்ளேன். அவற்றில் ஒன்றுதான் சுரைக்குடுவை. சுரைக்காய் ( Bottle gourd) ஒரு காய் என்று தெரியும். இது உண்ணும் காயாக மட்டுமல்ல, நீரை சேமித்து வைக்கும் கலனாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டு, காயை காய வைத்தால், அது குடுவையாக மாறிவிடும்.
அதில் நீர் சேமித்து வைப்பார்கள். நீச்சல் பயிலுபவர்கள் பழங்காலத்தில் சுரை குடுவை பயன்படுத்தி நீச்சல் பயின்றதும் உண்டு. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணமும் நிறைந்துள்ளது. சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால் ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று அழைக்கப்படுகிறது.
முற்றின காய்ந்த சுரைக்காய், இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை/
இவ்வாறு அவர் பேசினார்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் லட்சுமி நாராயணன், முகமது சுபேர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக சந்திரசேகரன் வரவேற்க, நிறைவாக அரிஸ்டோ நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu