திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

திருச்சி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சின்னப்பா எம்.எல்.ஏ.விற்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் பொன்னாடை போர்த்தினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் புலவர் முருகேசன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மைக்கேல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் துரையரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பொற்கோ (எ) கனகராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் அரியலூர் எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் சின்னப்பா கலந்து கொண்டு பேசினார்.

இதில், மே 21-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் செயலாளர் வழக்கறிஞர் சின்னப்பாவிற்கு மாவட்ட கழகம் சார்பில் பாராட்டு தெரிவிப்பது. இக்கட்டான வேளையில் உதயமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை எத்தனையோ சோதனைகளை தாண்டி 28 ஆண்டுகளாய் கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வரும் பொதுச் செயலாளர் வைகோவின் ஆளுமை, இனிமையாக பழகும் அன்பு இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் ஆகிய குணங்களைக் கொண்ட துரை வைகோவை கழகத்தில் இடணைத்து செயல்பட மனமகிழ்ந்து தகுந்த பொறுப்பினை வழங்கி வலிமையுடனும், பொலிவுடனும் கட்சியை வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வழிவகை செய்யும்படி கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!