திருச்சியில் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மேயர், கலெக்டர் உடனடி ஆய்வு

திருச்சியில் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மேயர், கலெக்டர் உடனடி ஆய்வு
X

திருச்சியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு நடத்தினார்.

திருச்சி காஜாமலை பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மேயர், கலெக்டர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் இன்று மாலை திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த பாதாள சாக்கடை குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இந்த சம்பவம் நடந்தது .இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 15 அடி நீள, அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .அந்த பள்ளத்தில் உள்ள குழி முழுவதும் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது .


திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் .குழாய் உடைப்பை சரி செய்து சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டு உள்ளனர். இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாலையை தோண்டி எடுத்து குழாய் உடைப்பு முழுவதையும் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story