திருச்சியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்

திருச்சியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்
X
திருச்சியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில்  சிஐடியு மாநில தலைவர் காசி விசுவநாதன் பேசினார்.
திருச்சியில் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி எடத்தெரு அண்ணா சிலை அருகில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மே தின பொதுக்கூட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வே.நடராஜா, சிஐடியு மாவட்ட தலைவர் டி.சீனிவாசன் தலைமை வகித்தனர்.

இதில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஏஐடியுசி தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன், சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.ஏஐடியுசி ராமராஜ், நேரு துரை சிஐடியு செல்வி, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இறுதியாக ஏஐடியுசி தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் ஏ.அன்சர்தீன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் காசி விஸ்வநாதன் பேசியதாவது:-

இரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் உரிமைகளை சிதைக்க கூடிய தொடர் நடவடிக்கைகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. சாதி, மதம் என்ற பல்வேறு பிரிவினைகளைச் சொல்லி தொழிலாளர்கள் பிரித்து அதன் மூலம் குளிர்காய நினைத்த மோடி அரசை தொழிலாளர்கள் ஒன்று கூடி வெல்வார்கள். அதற்கு சாட்சியாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலையும் தேர்தல் அமையும்.

முதன்முதலில் சமத்துவத்தை அறிக்கையாக வெளியிட்டது காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தான். இந்தியாவில் முதல்முறையாக 8 மணி நேர வேலையை உறுதி செய்தது பாண்டிச்சேரியில் தோழர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற போராட்டமே. அதற்குப் பிறகு தொழிலாளர் உரிமைகளையும், தொழிலாளர் சட்டங்களையும் பாதுகாக்க பல்வேறு கட்ட போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வெற்றி கண்டு இருக்கின்றனர். இப்படி நாடும் மக்களும் முன்னேற காரணமான கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தில் கூடுதலான எண்ணிக்கையில் அமர வேண்டியது கட்டாயம்.

அதே நேரம் அதானியினுடைய சொத்துக்கு சொந்தக்காரரான மோடியை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் தொழிலாளர் வர்க்கம் முன் இருக்கிறது. அதானியின் சொத்திற்கு மோடி தான் சொந்தக்காரர் என்று நான் கூறவில்லை, டெல்லி சட்டமன்றத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் இதை மூத்த பாஜக தலைவர் கூறியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது/

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!