திருச்சி மணிமண்டபம் கட்டுமான பணிகளை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு

திருச்சி மணிமண்டபம் கட்டுமான பணிகளை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு
X

திருச்சியில் மணிமண்டபங்கள் கட்டுமான பணிகளை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் மணிமண்டபம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், எம்.கே. தியாகராஜ பாகவதர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த மண்டபம் கட்டுமான பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், திருச்சி மாநகராட்சி 3-வது மண்டல குழு தலைவர் துர்கா தேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story