திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
திருச்சியில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரெனால்டு ரோஸ் லியோ.
திருச்சி உறையூர் நாச்சியார் பாளையத்தில் உள்ள காமராஜர் கல்வி கூடத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி திருச்சி திருவெறும்பூர் விஜயநகரத்தை சேர்ந்த சங்கரநாமம் என்பவரது மகள் காயத்ரி ( வயது 32) மற்றும் அவரது உதவியாளர் தூயமலர் மார்டினா என்கிற இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.
அந்த கல்வி கூடத்திற்குள் திடீரென புகுந்த ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி காயத்ரி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு பவுன் வளையல்களையும், தூய மலர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் என மொத்தம் 5 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு இரண்டு பெண்களையும் அங்கிருந்த கழிவறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டுள்ளனர்.
இது குறித்து காயத்ரி உறையூர் குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் போரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்ற திருச்சி கே.கே.நகர் சிம்கோ மீட்டர் ரோட்டில் உள்ள தேவராயர் நகரை சேர்ந்த லியோ என்கிற ரெனால்டு ரோஸ் லியோ (வயது 39) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த லியோ என்கிற ரெனால்டு ரோஸ் லியோவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ரெனால்டு ரோஸ் லியோ சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu