திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆண் சடலம் -போலீசார் வேண்டுகோள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்  ஆண் சடலம் -போலீசார் வேண்டுகோள்
X
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் பற்றி தகவல் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம். தகவல் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள்

திருச்சி மாநகரம், கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகத்தில் இன்று அதிகாலை சுமார் 03-00 மணியளவில் திருச்சி மத்திய பஸ் நிலையம் திருவள்ளுவர் பஸ் நிறுத்தம் அருகே டீ கேன்டீன் வடபுறம் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாப சம்பவ இடம் வந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர் கீழே விழுந்து கிடந்தவரை பரிசோதித்ததில் இறந்து விட்டதாக கூறியுள்ளார். கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இறந்தவர் பெயர் விலாசம் தெரியவில்லை. இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். சிகப்பு கலர் டீ சர்ட், கட்டம் போட்ட ஊதா கலர் கைலி, பச்சை கலர் டிராயர் ஜட்டியும், வலது கையில் சிவப்பு கருப்பு, மஞ்சள் கலர் கயிறு கட்டியுள்ளார். சுமார் 5. 1/2 அடி உயரமும், கருப்பு நிற தாடியுடன் திடகார்த்தமான உடல் வாகு உள்ளவர். இவரை பற்றி அடையாளம் தெரிந்தவர்கள் கண்டோண்மெண்ட் போலீஸ்க்கு 0431- 2460692 என்ற போன் நெம்பரில் தகவல் தெரிவிக்க கேட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்