திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு தாமதம்

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு தாமதம்
X

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு ஒட்டு பதிவு நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் இயந்திரம் கோளாறு. வேறு இயந்திரம் மாற்ற ஒட்டு பதிவு தாமதம்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டு வெஸ்ட்ரி பள்ளியில் அமைந்துள்ள 613வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இ.வி.எம்.இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலையிலிருந்து 62- பேர் வாக்களித்து இருந்த நிலையில் திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் வேறு ஒரு வாக்கு பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மையத்தில் வாக்களிக்க வந்த திருச்சி சிவா எம்.பி நீண்ட நேரம் காத்திருந்தார். இவருடன் வாக்களிக்க வந்தவர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்து நிற்கின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!