திருச்சியில் 20 நாட்களில் லாட்டரி சீட்டு விற்ற 38 பேர் கைது

திருச்சியில் 20 நாட்களில்  லாட்டரி சீட்டு விற்ற 38 பேர் கைது
X
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றதாக 20 நாட்களில் 38 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சி மாநகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்லவும், லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கவும், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் உறையூர் போலீஸ் நிலையத்தில் 7 பேர், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையங்களில் 10 பேர், காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 16 பேர், கண்டோன்மெண்ட் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையங்களில் 4 பேர், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் என மொத்தம் 28 வழக்குகளில் 38 பேர் கடந்த 20 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பணம், 7 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture