திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து
X

பைல் படம்.

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி 2 அருகே மதுரை பைபாஸ் ரோட்டில் ஆந்திராவிலிருந்து சிவகாசிக்கு பேப்பர் லோடு ஏற்றி வந்த அசோக் லேலண்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டி வந்த வெங்கடேசன் (வயது32) தகப்பனார் என்பவருக்கு சிறிய காயம் ஏற்பட்டு 108 மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி திருச்சி தெற்கு விபத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!