திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் 2 மகளுடன் தீக்குளிக்க முயற்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் 2 மகளுடன் தீக்குளிக்க முயற்சி
X
தீக்குளிக்க முயன்ற பெரியசாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தீக்குளிக்க முயன்ற பெரியசாமியின் மகளை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தண்டலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). லாரி டிரைவராகவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பெரியசாமி கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர் தனது மனைவி சுதாவை கடத்தி சென்றதாக கூறி முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்ற போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி இன்று காலை பெரியசாமி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அலுவலகம் முன்பு திடீரென தனது இரண்டு மகள்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதை அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் அருணாச்சலம் ஆகியோர் பார்த்து உடனடியாக மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு மூன்று பேரையும் காப்பாற்றினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்