திருச்சி மாவட்டத்திற்கு நாளை மறு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திற்கு நாளை மறு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை யொட்டி திருச்சி மாவட்டத்திற்கு நாளை மறு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது .அன்று காலை 10 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும்.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future