திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சா ர்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நடந்தது.

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் திருச்சி தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

நேர்காணலில் சுமார் 480 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்

இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன், பகுதி செயலாளர்கள் மதிவாணன், நீலமேகம், தர்மராஜ், மணிவேல்,மோகன்,டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது, நகரசெயலாளர்கள் காயாம்பூ கீதாமைக்கேல்ராஜ், பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், பழ.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!