ரயிலில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயம்

ரயிலில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயம்
X
தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயமானதாக கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கடந்த 9-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ரயிலில் அனாதையாக இருந்த சிறுமியை ரயில்வே போலீசார் மீட்டு சத்திரம் பஸ் நிலையம் அருகே வி.என்.நகரில் உள்ள ஒரு தனியார் (சொந்தம்) அரசு உதவி பெறும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த சிறுமி கடந்த 12-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காப்பகத்தின் கேட்டை திறந்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!