தீபாவளியையொட்டி திருச்சி மாவட்டத்தில் ரூ.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தீபாவளியையொட்டி திருச்சி மாவட்டத்தில் ரூ.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
X
தீபாவளியையொட்டி திருச்சி மாவட்டத்தில் ரூ.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 25 கோடிக்கு மதுபானம் விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 5 எலைட் மதுபான விற்பனை கூடங்கள் உட்பட 161 டாஸ்மாக் சில்லறை கடைகள் உள்ளன. இதில் 105 கடைகள் பார்களுடனும், இதர கடைகள் இல்லாமலும் இயங்கி வருகின்றன.

மேலும் கலால் துறை மூலமாக இயங்கும் 12 மன மகிழ் மன்றம், 32 ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட மதுபான விடுதிகள் இயங்கி வருகின்றன.

இங்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. நான்கரை கோடிக்கு மதுபானம் விற்பனையாகி வருகிறது.

இதில் விழா காலங்களில் கூடுதலாக மது விற்பனையாகும் அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,11, 12 ஆகிய 3 தேதிகளில் ரூ. 25 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது வழக்கமாக சனிக்கிழமை சுமார் ரூ. 5 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்தரை கோடி முதல் 6 கோடி வரை விற்பனை இருக்கும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 3 நாட்களில் கூடுதலாக ரூ.9 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது என்றார்.

இதில் பீர் பாட்டில்கள் அதிக அளவு விற்பனையாகியுள்ளது. ஆகவே விழாக்காலங்களில் மது அருந்தும் இளைஞர்கள் அதிகம் பீர் பாட்டில்களை வாங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதேபோன்று திருச்சி மாநகரில் உள்ள மனமகிழ் மன்றம், எலைட், ஓட்டல்களில் ஒருங்கிணைந்த பார்கள் ஆகியவற்றிலும் பல கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !