காரைக்கால்- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால்- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட  மதுபாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

காரைக்கால் திருச்சி விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் திருச்சி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி - காரைக்கால் விரைவு ரயில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்த போது அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்சோதனை செய்தனர். அப்போது அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு கைப்பைகளைபோலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பைகளில் போலீசார் சோதனையிட்ட போது அதில் ரூ. 8,300 மதிப்பிலான பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த மது பாட்டில்களை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story