உயிர்காக்கும் ஹெல்மட் பற்றிய வீடியோ பதிவு விழிப்புணர்வு பிரச்சாரம்

உயிர்காக்கும் ஹெல்மட் பற்றிய வீடியோ பதிவு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி.

உயிர்காக்கும் ஹெல்மட் பற்றிய வீடியோ பதிவு விழிப்புணர்வு பிரச்சாரமாக சமூக வலைத்தளங்களில் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ஆயுதப்படையில் பாசில்கான் (வயது 25) என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக டூவீலரில் வந்துகொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் நாய்க்குட்டி ஒன்று ரோட்டில் குறுக்கே வந்து வண்டியில் விழுந்தது.

அப்போது செய்வதறியாது திகைத்த பாசில்கான் பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் விழிப்புணர்வாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரமாக செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture