ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியீடு

ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியீடு
திருச்சியில் ஜவகர்லால்  நேரு எழுதிய கடிதங்கள் நூல் வெளியிடப்பட்டது.
ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியிடப்பட்டது.

மறைந்த பிரதமர் ஜவகர் லால் நேரு எழுதிய "ஒரு தேசத்திற்கான கடிதங்கள்"நூல் வெளியீட்டு திருச்சியில் விழா நடைபெற்றது. வாசிப்போர் களம் அமைப்பின் அமைப்பாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.

இந்த நூலை காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி வெளியிட்டார்.முதல் பிரதியை காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை பெற்றுக்கொண்டார். நேருவின் கடிதங்களை தொழிற்சங்க தலைவர் நா. வீரபாண்டியன் தமிழில் மொழி பெயர்த்துஉள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஶ்ரீதர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழாதன், எழுத்தாளர் சங்கையா, கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் நூலாசிரியர் வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினர். கணேசன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story